இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். எதிர்ப்புகளைப் புரிந்துகொண்டு, வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் திட்டமிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். விவசாயிகள் வருவாய் உயரக் காண்பார்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவார்கள். கலைத்துறையினர் சகக் கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் யோகா கற்றுகொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலை கவனமாக நடத்துவீர்கள். பொறுப்புகள் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாக அமையும். எதிர்ப்புகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் பணிகளை அமைதியாக முடிப்பார்கள்.
வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்துவார்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நன்மதிப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் வருவாய் உயரக் காண்பார்கள். மாணவர்கள் நெருக்கடிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வருவாய் உயரத் தொடங்கும். சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்த வேண்டாம்.
வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சேர்ந்து இணக்கமாகப் பணியாற்றுவார்கள். விவசாயிகளுக்கு பயிர்களில் புழு, பூச்சிகளின் தொல்லை சிறிது இருக்கும். அரசியல்வாதிகள் அநாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினருக்கு எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறும். பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளைக் கற்றுக் கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு சலுகைகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தோர் பாராட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களில் புதிய விஷயங்களைக் கற்றுகொள்வர்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சீராகவே இருக்கும். விவசாயிகள் பழைய கடன்களை அடைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைத் திறம்பட செயல்படுத்துவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாகும். சான்றோரின் சந்திப்பு மனதில் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்திலிருந்த குறைபாடுகள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் பிரபலமடைவார்கள். விவசாயிகளின் பயிர்களுக்குப் பாதிப்பு இருக்காது. அரசியல்வாதிகள் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக மாட்டார்கள்.
கலைத்துறையினர் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் பிறரிடம் நன்கு பழகுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரை சந்திப்பீர்கள். வருவாயை தர்மக் காரியங்களுக்குச் செலவழிப்பீர்கள். சுப காரியங்கள் நடத்த முயற்சிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய அலுவலகங்களுக்கு மாறுதல் அடைவார்கள். வியாபாரிகளுக்கு இருந்த தடை நீங்கும். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர் கடினமான வேலைகளை நடத்திக் காட்டுவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறு பயணங்களால் நன்மை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
தன்னம்பிக்கை கூடும். விடாமுயற்சிகளை மேற்கொண்டு, காரியங்களை முடிப்பீர்கள். முக்கிய தருணங்களில்அனுபவ அறிவு கை கொடுக்கும். நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து பணியாற்றுவார்கள்.
வியாபாரிகள் புதிய சவால்களைத் திறம்பட சமாளிப்பார்கள். விவசாயிகள் மகசூலில் லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு புகழ் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தாருடன் பாசத்துடன் பழகுவார்கள். மாணவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
சந்திராஷ்டமம்} 14.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
உயர்ந்தோரின் நட்பும், ஆதவும் கூடும், மதிப்பும் மரியாதையும் உண்டாகும். குடும்பத்தில் குதூகுலம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியரிடம் பழகி காரியத்தைச் சாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் மானிய விலையில் உரங்களை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் குழப்பங்களிலிருந்து விடுபடுவார்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் நன்கு பழகுவார்கள். மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்} 15,16,17.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். முக்கிய முடிவுகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள்.
வியாபாரிகள் தள்ளிவைத்த வியாபாரத்தை எடுத்து நடத்துவார்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி, பலன்களைப் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு சுபச் செய்தி கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
சந்திராஷ்டமம்} 18,19.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உழைத்து நற்பெயரை எடுப்பார்கள்.
வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் குத்தகை லாபத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் தங்களைச் சுற்றியுள்ள பிரச்னைகளால் வருத்தமடைவார்கள்.
கலைத்துறையினர் புதிய படைப்புகளில் திருப்தி அடைவார்கள். பெண்கள் முக்கிய தருணங்களில் குடும்பத்தினருக்கு உதவி செய்வார்கள் மாணவர்கள் தங்களது எண்ணங்களைப் புரிந்துகொண்டவர்களிடமே பழகுவார்கள்.
சந்திராஷ்டமம்} 20.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
வருமானம் உயரத் தொடங்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சரியான முடிவை எடுப்பீர்கள்..
உத்தியோகஸ்தர்களின் திறமைகளை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். வியாபாரிகள் கூடுதல் பணிகளால் சோர்வடைவார்கள். விவசாயிகள் பயிர்களைப் பாதுகாப்பீர்கள். அரசியல்வாதிகள் தீயவர்களிடமிருந்து விலகுவார்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவார்கள்.
மாணவர்கள் கால நேரத்தை வீணாக்காமல் உழைப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நட்பு கிடைக்கும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் விடாமுயற்சியையும் உழைப்பையும் பிறர் பாராட்டுவார்கள். வியாபாரிகள் கவனமாக இருந்து நஷ்டங்களைத் தவிர்ப்பார்கள்.. விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் பிறரிடம் மோதல் போக்கைத் தவிர்க்கவும். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.