இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குடும்பத்தினரிடம் விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்கு உதவிகளைச் செய்வார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பார்கள். கலைத்துறையினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வார்கள். மாணவர்கள் சாதனைக்கு வித்திடுவார்கள்.
சந்திராஷ்டமம்} மே 7,8.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம் , மன வளம் சீராகவே இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பண வரவு இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேசுவார்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினர் புதிய செயல்முறை பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
பெண்கள் தாய்வழி உறவினர்களிடம் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடப்பார்கள்.
சந்திராஷ்டமம்} மே 9,10.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நல்ல சூழல் நிறையும். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்புகளைக் கூட்டுவீர்கள்.
புதிய நம்பிக்கை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு முற்போக்கு சிந்தனைகள் உண்டாகும். கலைத்துறையினர் பிரச்னைகளைக் குறைத்துகொள்வார்கள்.
பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்றுவருவார்கள். மாணவர்கள் பெற்றோரை அரவணைத்துச் செல்வார்கள்.
சந்திராஷ்டமம் - மே 11.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழிலில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்துகளில் வருவாய் கிடைக்கும். உடன்பிறந்தோரும் ஆதரவாக இருப்பார்கள். இறைவழிபாட்டில் தெளிவு உண்டு.
உத்தியோகஸ்தர்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் புதிய கடன்களைப் பெறுவார்கள். விவசாயிகள் லாபம் உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் மரியாதையை உயர்த்திக் கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பெரியவர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். கீழ்பணிபுரிவோரிடம் கனிவாக நடந்துகொள்வீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். புதியவர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்பாகத் தங்களது வேலைகளைச் செய்து முடிப்பார்கள். வியாபாரிகள் உயர்வைக் காண்பார்கள். விவசாயிகள் உழைத்து மகசூலைப் பெருக்குவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் சிறுதொல்லை உண்டு. கலைத்துறையினருக்கு வருவாய் உண்டு. பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
விடாமுயற்சி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். உடன்பிறந்தோர் ஆலோசனைகளைக் கேட்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் பிறரை துணிவுடன் எதிர்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
பெண்கள் இனிய தருணங்களை எதிர்பார்ப்பார்கள். மாணவர்கள் பயணங்கள் செய்வார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை,
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
செலவுக்கேற்ற வரவும் உண்டாகும். பிறர் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துவிடுவார்கள். வியாபாரிகள் புதிய விற்பனைப் பிரதிநிதிகளைப் பெறுவார்கள்.
விவசாயிகள் கடினமான உழைத்துப் பாடுபடுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்பார்கள்.
கலைத்துறையினர் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்கள். பெண்கள் உறவினர்கள் அதிகம் பேச வேண்டாம். மாணவர்கள் நல்ல நண்பர்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
எடுத்த காரியங்களை மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். போட்டிகளையும் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணம் கை வந்து சேரும். வியாபாரிகள் வியாபாரத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வார்கள். விவசாயிகள் கால்நடை பராமரிப்புச் செலவு கூடும்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினர் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பார்கள்.
பெண்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் ஞாபகச் சக்தியை மேம்படுத்தவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் பலன்கள் கிடைக்கும். புது செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே அமையும். வியாபாரிகளுக்கு உதவிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு லாபம் சிறப்பாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரை சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கூடுதல் வருவாய் கிடைக்கும். பெண்கள் புதிய வாகனங்களை வாங்குவார்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிறையும். விலகிய உறவினர்கள் மீண்டும் இணைவார்கள். தொழிலில் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். மனக் குழப்பம் அகலும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிக்குப் பிறகே புதிய ஒப்பந்தம் கைகூடும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்களின் பழைய முயற்சிகள் இப்போது கைகூடும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் தொய்வு ஏற்பட்டாலும், சமாளிப்பீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு தள்ளிப் போகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகள் மாற்றுப்பயிர்களால் லாபம் பெறலாம். அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரை புரிந்துகொண்டு திட்டங்களை மாற்றிக் கொள்ளவும்.
கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் பெரியவர்கள் கூறும் அறிவுரையை கேட்டு நடப்பது உசிதமாகும். மாணவர்கள் முன்னேற்றம் காணலாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசு அலுவலர்களின் ஆதரவு பெருகும். பழைய கடன் வசூலாகும். எதிர்ப்புகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் சில வருத்தம் ஏற்படும்.
வியாபாரிகள் அநாவசியச் செலவுகளைச் செய்ய வேண்டாம். விவசாயிகள் பால் வியாபாரத்தின் மூலம் வருமானம் பெறுவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் பணிபுரிவார்கள்.
பெண்கள் பெருமையை உணர்த்துவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - மே 5,6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.