வெள்ளிமணி

பாவம் விலகும்

ஸ்ரீவாஞ்சியத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி – பாவ நிவாரணம், பிதுர் தோஷம் நீங்கும் அரிய வாய்ப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

"தென்னிந்தியாவின் காசி' எனப் போற்றப்படும் தலங்களுள் ஒன்று, திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் முதன்மையான தலம். காசியில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைத்தால் புண்ணியம். இங்கு இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றினாலே புண்ணியம்.

"ஸ்ரீ'யை வாஞ்சித்து (மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் செய்ததால் ஸ்ரீவாஞ்சியம் எனப்பெயர் பெற்ற இத்தலத்தில் அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,

சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

கங்கா தேவி தனது ஒரு கலையை மட்டும் கங்கையில் விட்டு விட்டு மீதமுள்ள 999 கலைகளுடன் ஸ்ரீ வாஞ்சியம் வந்து கோயில் தீர்த்தக் குளத்தில் நீராடி வாஞ்சிநாதரை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றாள். எனவே இந்தத் திருக்குளம் குப்த கங்கை என கங்கை நதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இங்கு தீர்த்தவாரி நடைபெறும். அதிலும் டிசம்பர்

14}ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி மிகவும் விசேஷமானது. இது சகல பாவங்களையும், பிதுர் தோஷத்தையும் போக்கவல்லது.

தஞ்சை இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT