தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ. 14 - 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தன்னம்பிக்கை உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வினைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். விவசாயிகள் கறுப்பு நிறப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். கலைத்துறையினருக்கு சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 20.
குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகளின் பேச்சுக்கு சக வியாபாரிகள் மத்தியில் மதிப்பு கூடும். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் தகுதியான தொண்டர்களிடம் முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய கலைநுட்பங்களைச் செயல்படுத்துவீர்கள். பெண்கள் தாய்வழி உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் தெளிவுடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருணை பார்வையைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.
விவசாயிகள் விவசாயக்கூலிகளைத் தட்டிக்கொடுத்து நடந்துகொள்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கற்பனை வளம் அதிகரிக்கும்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் முனைப்புடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்குவீர்கள். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப்பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு தங்கள் காரியங்களில் ஆர்வம் கூடும்.
பெண்கள் கணவரிடம் மனம் திறந்து பேசுவீர்கள். மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவித்தொகை கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நேர்முக, மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். விவசாயிகள் பயிர்களில் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடம் இட்ட கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் பணவரவு கூடுதலாக இருக்கக் காண்பீர்கள்.
பெண்கள் தற்பெருமைகளைக் குறைத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் சக நண்பர்களைப் புரிந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். உடல் நலனில் கருத்தாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் விவசாயத்தில் சிறு சங்கடங்களைச் சந்திப்பீர்கள்.
அரசியல்வாதிகள் களப்பணிகளில் உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக்கொள்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை பெரிதுபடுத்த மாட்டீர்கள். கலைத்துறையினர் துறையில் சுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
இல்லத்துக்குத் தேவையானவற்றை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை விரைவாகச் செய்துமுடிப்பீர்கள். வியாபாரிகள் பணியாள்களிடம் நட்புடன் நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் கடினமாக உழைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் அளவுடன் ஈடுபடுவது நலம் பயக்கும். கலைத்துறையினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்.
பெண்கள் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து குடும்பப் பொறுப்புகளைக் கையாளுவீர்கள். மாணவர்கள் தேக ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளும் சாதகமாக முடிவடையும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மனம் கோணாமல் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை ஆலோசித்தே செயல்படுவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திரும்பச் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த பிரச்னைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மனக்குறைகள் மறையும். பெற்றோரின் தேவைகளைப் பெறுவீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரெடுப்பீர்கள். வியாபாரிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்கச் சிந்தித்துச்செயல்படுவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கணவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 14.
ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவீர்கள். காரியங்களை பொறுப்புடனும் பொறுமையுடனும் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகள் உண்டாகும். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்தின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். மாணவர்கள் புதிய கல்விப்பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 15, 16, 17.
வேலைகளை தனித்து சுதந்திரமாகச் செய்துமுடித்துவிடுவீர்கள். எதிர்பாரா பயணங்கள் செய்ய நேரிடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளிடம் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் சிறு அலைச்சல்கள் உண்டாகும். விவசாயிகள் கொள்முதலில் சீரான நிலையைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பணவரவு கூடும்.
பெண்கள் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 18, 19.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.