வார பலன்கள் 
வெள்ளிமணி

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

தினமணி செய்திச் சேவை

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப். 20 - 26) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்புக்கு இப்பொழுது பலன் கிடைக்கும். கலைத்துறையினர் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் அதிகமாக உழைத்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளின் விற்பனை பிரதிநிதிகள் பல இடங்களுக்குச் சென்று விற்பனையைப் பெருக்குவார்கள்.

விவசாயிகளுக்கு சிறிய தடைக்குப் பிறகு புதிய குத்தகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களுக்கு நேரம் ஒதுக்கிவீர்கள்.

கலைத்துறையினருக்கு பண வரவு சீராக இருக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வீர்கள். குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படாது. வியாபாரிகள் தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டியால் நல்ல லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நிச்சயமாகும். தொழிலில் வளர்ச்சியடைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் கூடினாலும் காரியங்கள் சிறப்பாக முடிவடையும். கலைத்துறையினர் கடினமாக உழைத்து நல்லபடியாக முன்னேறுவீர்கள். பெண்கள் ஆடை அணி

கலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் தீயவர்களின் நட்பை விலக்கிவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 20, 21.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். ஆரோக்கியமும் மன வளமும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மனதை அரித்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாடும்போது கவனமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 22, 23.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். குடும்ப முன்னேற்றத்துக்கான சம்பவங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்று நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிசம்பர் 24, 25.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அன்னை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிலும் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் } பிப்ரவரி 26.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நேர்வழியில் சிந்தித்துக் காரியமாற்றுவீர்கள். உங்கள் சுய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உற்றார் உறவினர் உங்கள் இல்லம் தேடிவருவர்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் வருமானம் உயரக் காண்பீர்கள். பெண்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயிகள் கொள்முதலில் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் சக கலைஞர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்கள் பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். சிலர் நிலம், வீடு வாங்குவீர்கள். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும்.

விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருப்பதால் விளைச்சல் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் சீரிய அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சிறிய போட்டி பொறாமைகளைச் சந்திப்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம் கண்டுகொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சின்னம்: ராமதாஸ் வழக்கு தள்ளுபடி; நீதிமன்றம் எச்சரிக்கை!

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்: மார்ச் 9-ல் அடுத்த விசாரணை!

20-ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்ற சிக்கந்தர் ராஸா!

அடுத்த 2 மாதங்களில் திரும்ப வந்து வேகமாக பணிகளைத் தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு!!

SCROLL FOR NEXT