முகப்பு
உலகம்

பெருவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் கஸ்கோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை

Updated On : 1 ஜனவரி 2013, 1:20 am IST
பகிர்:

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் கஸ்கோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு நேரப்படி மாலை 3.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. கஸ்கா நகரத்தின் வடகிழக்கே 129 கி.மீ. தொலைவில், 41.5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 நாடு முழுவதும் ஒரே நேரத்திலும், கிட்டத்தட்ட சக்திவாய்ந்ததுமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, இது நான்காவது முறையாகும் என்று, பெரு நாட்டின் புவிஇயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரு நாடு பசிபிக் கண்டத்தில்,"நெருப்பு வளையம்' என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் மொத்த நிலநடுக்கங்களில், 85 சதவீத நிலநடுக்கங்கள் பெருவில்தான் ஏற்படுகின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.