66 ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தது இலங்கை அரசு
இலங்கை தமிழ் அகதிகள் 66 பேரை பயங்கரவாதிகள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளது அந்நாட்டு அரசு.
இலங்கை தமிழ் அகதிகள் 66 பேரை பயங்கரவாதிகள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளது அந்நாட்டு அரசு.
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இவர்கள் கடந்த 6-ம் தேதி நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக இலங்கை பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவைச் சேர்ந்த படகு ஒன்றில் சென்ற இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதில் 41 ஆண்கள், 13 பெண்கள், 6 சிறுவர்கள், 6 சிறுமிகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் இலங்கையின் பயங்கரவாதிகள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் யாரும் உள்ளார்களா? ஆஸ்திரேலியா தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கும் தங்கள் இயக்கத்தினரை சந்திக்கும் திட்டம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்திய படகு கைப்பற்றப்பட்டது, அதில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் இலங்கை அரசிடம் இருந்து தங்களுக்கு வரவில்லை என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.