முகப்பு
உலகம்

அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கு நெருக்கடி தர வேண்டும்

அணுஆயுதம் தயாரிக்கும் திறனைப் பெறுவதற்கான நடவடிக்கையை கைவிட மறுக்கும் ஈரானுக்கு உலக நாடுகள் நெருக்கடி தர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

அணுஆயுதம் தயாரிக்கும் திறனைப் பெறுவதற்கான நடவடிக்கையை கைவிட மறுக்கும் ஈரானுக்கு உலக நாடுகள் நெருக்கடி தர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க - இஸ்ரேல் பொது விவகாரங்கள் குழுவின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டுப் பேசிய நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

Advertisement

அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூலம் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு வல்லரசு நாடுகளுடனான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே ஈரானின் நோக்கமாகும்.

அந்த நாட்டினர் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றனர். ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி அவசியம் என்று ஈரான் தெரிவிக்கின்றது.

ஆகையால், அந்த நாட்டினர் கனரக உலைகளை ஏன் அமைக்க வேண்டும்? மேலும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறிவரும் அவர்கள் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்களை ரகசிய ராணுவ தளத்தில் ஆய்வு செய்யவிடாமல் தடுப்பது ஏன்?

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்து வருவதன் நோக்கம் என்ன? இதன் பின்னணி, அணு ஆயுதப் போரை ஏற்படுத்துவதே. அணு ஆயுத உற்பத்தி செய்வதே கனரக உலைகளை அமைப்பதன் நோக்கம் என்றார் நெதன்யாகு.

ஈரான் மறுப்பு: எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வருகிறது. மருத்துவ மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்காக ஐசோடோப்புகள் தயாரிக்க கனரக உலைகள் தேவைப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த நவம்பரில் இடைக்கால அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவில் யுரேனியம் சுத்திகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய யுரேனியத்தை யூரேனியம் ஆக்ûஸடாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீதான சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments