கனடாவை சேர்ந்த ஆஷ்லே மேடிஸன் என்ற இணையத்தளம் உலகளவில் உள்ள கள்ளக்காதல் ஜோடிகளை இணைக்கும் தரகராக செயல்பட்டு வருகிறது.
இந்த இணையதளத்தில் 3 கோடியே 20 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இணைய ஹேக்கர்கள் இந்த தளத்தில் உள்ள தகவல்களை திருடி அதன் மூலம் ஆஷ்லே மேடிஸன் நிறுவனத்துடன் பணம் தொடர்பான பேரத்தில் இறங்கியது.
இதற்கிடையே சமீபத்தில் ஆஷ்லேவின் உறுப்பினர்களின் பெயர்கள் ,விலாசம், தொலைபேசி எண், புகைப்படம் ஆகியவற்றை ஆஷ்லே மேடிஸன் என்ற இணையத்தளத்தினர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதில் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவை சேர்ந்த 1 மில்லியன் மக்களும், கள்ளத்தனமான பாலியல் தொடர்புகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சவுதி அரேபியாவை சேர்ந்த 1400 பேரும் உறுப்பினர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.