விமானத்தில் வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதால், ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மொரிஷியஸ் தீவிலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிக்கப்பப்பட்டது. இதையடுத்து விமானம் கென்யாவின் மொம்பாசா நகரில் உள்ள மொய் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மொரிஷியஸிலிருந்து இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் இரவு 10.30 மணி) ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஏ.எப்.463, பாரீஸ் நகருக்குப் புறப்பட்டது.
விமானத்தில் 459 பயணிகளும், 14 பணியாளர்களும் இருந்தனர்.
விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கு இடமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரவு 1 மணியளவில் மொய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்
கடற்படை மற்றும் சி.ஐ.டி. பிரிவில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு போன்ற பொருள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டது.
பிரான்ஸுக்கு காலை 5.50 மணிக்கு (இந்திய நேரம் 10.20) சென்றடையவேண்டிய விமானம், தற்போது வரை மொம்பாசா விமான நிலையத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி சார்லஸ் ஓவினோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.