உலகம்

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: பாரிஸில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி

தினமணி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 16 பேரை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கேலிச் சித்திரங்கள், அரசியல், சமூக விமர்சனங்களை வெளியிடும் "சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.

இவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.

அவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதல்களைக் கண்டித்து சனிக்கிழமை 7 லட்சம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர், பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல் பிரதமர்கள், உக்ரைன் அதிபர், பாலஸ்தீனம் உள்ளிட்ட சுமார் நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணி பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பாதுகாப்பு தொடர்பாகத் தலைவர்களின் கூட்டம் காலையில் நடைபெற்றது. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கூடங்கள், யூத வழிபாட்டுத் தலங்கள், மசூதிகளுக்குப் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேரணியை முன்னிட்டு, தலைநகர் பாரிஸில் கூடுதலாக 2,000 போலீஸார் குவிக்கப்பட்டனர். ராணுவ வீரர்கள் 1,350 பேர் பாரிஸில் சிறப்புக் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைத் தவிர, பேரணியின்போது உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிரான்ஸில் சுமார் 47 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் நாடு பிரான்ஸ் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT