முகப்பு
உலகம்

பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத் மர்ம மரணம்: முக்கிய தடயங்கள் சிக்கின

பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத் மர்ம மரணம் குறித்த விசராணையில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள

Updated On : 12 நவம்பர், 2015 at 11:19 AM
பகிர்:

பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத் மர்ம மரணம் குறித்து நடைபெற்று வரும் விசராணையில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அராஃபத்த்தின் மர்ம மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பாலஸ்தீனம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, பிரெஞ்ச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது யாசர் அராஃபத் மர்ம நோய் ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்காலம் என கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது 11-வது ஆண்டு நினைவஞ்சலி நேற்று (நவ. 11) நடைபெற்றது.

Advertisement

அப்போது தொலைகாட்சியில் தோன்றிய பாலஸ்தீன அதிபர்  மெஹ்மூத் அப்பாஸு, அராஃபத் மரணம் குறித்து நீண்ட நாள்களாக நடைபெற்று வரும்  விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. உண்மை கண்டறியப்படும் வரை விசாரணை தொடரும் என்றார்.

அராஃபத்தின் உறவினரும் படா (Fatah Party) கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான நாசர் அல்-க்யுத்வா கூறுகையில், விசாரணைக் குழு கண்டறிந்துள்ள முக்கிய தடயங்களை விரைவில் வெளியிடும் என்றார்.

விசாரணைக் குழுவின் தலைவர்  தௌஃபிக் திராவி கூறுகையில், யாசர் அராஃபத் மரணம் அடைந்தபோது, மருத்துவமனையில் ஒரு மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். எனினும், அவர் யார் என்ற விவரம் குறித்த ரகசியங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

யாசர் அராஃபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அவர் அருகே செல்ல முயன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், அராஃபத்தை கொலை செய்வதற்காக நடைபெற்ற அரசியல் சூழ்ச்சிகள் வெளிவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.