முகப்பு
உலகம்

ஐ.எஸ். தீவிரவாத தலைமையகம் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல்

தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது.

Updated On : 16 நவம்பர், 2015 at 2:42 PM
பகிர்:

தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது.

கடந்த 13 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு பதிலடியாக பிரான்ஸ் போர் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகமாக கருதப்படும், சிரியாவில் உள்ள ரக்கா நகர் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தின.

Advertisement

கமாண்டன்ட் அலுவலகம், ஆள்சேர்ப்பு மையம், வெடிபொருள் கிட்டங்கி, பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் இத்தாக்குதல் நடைபெற்றது.

பத்து ஜெட் போர் விமானங்கள் உள்பட 12 விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக, பிரான்ஸ் பாதுகாப்பு துறை ஊடக தொடர்பாளர் மைக்கேல் சோரியா கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் நகரிலிருந்து புறப்பட்ட பிரான்ஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்க படைகளும் உதவி செய்தன.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஏதும் உடனடியாக தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.