போப் ஆண்டவருக்கு சிகிச்சையா? ஜப்பான் மருத்துவர் மறுப்பு
போப் ஆண்டவருக்கு மூளையில் ஏற்பட்டிருக்கும் சிறிய கட்டிக்கு சிகிச்சை அளித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று ஜப்பானின் புகழ்பெற்ற மூளை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டகநோரி புகுஷிமா கூறியுள்ளார்.

ஒரே ஒரு முறைதான் நான் அவரை சந்தித்துள்ளேன். அதையும் போப் ஆண்டவர் நினைவு வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்று புகுஷிமா கூறினார்.
ஏராளமான பொய்ச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
போப் ஆண்டவருக்கு மூளையில் சிறிய கட்டி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை குணப்படுத்த முடியும் என்றும், ஜப்பான் மருத்துவர் புகுஷிமா, போப்புக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.