உலகம்

மெக்கா பெரிய மசூதி விபத்து: சவூதி மன்னர் சல்மான் ஆய்வு

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா பெரிய மசூதியில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில், 2 பேர் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் ஆவர்.

ஆர். வெங்கடேசன்

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா பெரிய மசூதியில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில், 2 பேர் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் ஆவர்.

மெக்கா பெரிய மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால் தொழுகை முடிந்த பிறகு அவர்கள் மசூதிக்குள்ளேயே இருந்தனர்.

அந்த நேரத்தில் மசூதியின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன்களில் ஒன்று, கூட்டத்தினர் மீது சரிந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 87 பேர் உயிரிழந்தனர். 184 பேர் காயமடைந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக மெக்கா நகரின் அமிரும் சவூதி இளசரசருமான அல் ஃபைசல் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டின் மன்னராக பதவி வகிக்கும் சல்மான், விபத்து நிகழந்த மெக்கா பெரிய மசூதிக்கு இன்று நேரில் சென்று சேதம் குறித்த விபரங்கள் பற்றி ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்கு சென்று தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார் மன்னர் சல்மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT