உலகம்

பாகிஸ்தான் மாடல் அழகியை "கவுரவக் கொலை" செய்த சகோதரர் கைது

தினமணி

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் மாடல் அழகி குவாந்தீல் பலூச்சை "கவுரவக் கொலை" செய்த அவருடைய சகோதரர் வசீம் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில்  நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார்.

மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளஙகளில் அவரால் வெளியிடப்பட்ட  அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட"செல்பி" புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது. அத்துடன் முகநூலில் வெளியிட்ட  அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்.

வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.   மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.

இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார். அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார்.

அவரை தேடி வந்த போலீசார், சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது

எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள்  மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள் . மேலும் மதகுரு முஃதி காவியுடன்  அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள்  உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக்  கொன்றேன் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.,  

இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமி ன்  தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சா சாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT