முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் உள்ள பழைய கப்பல்களை உடைக்கும் தளத்தில் விபத்து: 10 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள பழைய கப்பல்களை உடைக்கும் தளம் ஒன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

Updated On : 1 நவம்பர், 2016 at 4:40 PM
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பழைய கப்பல்களை உடைக்கும் தளம் ஒன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் கராச்சி நகரையொட்டி கடானி என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இங்கு காலாவதியான பழைய கப்பல்களை உடைக்கும் தளம் ஒன்று செயல்பட்டு வந்தது.  அங்கு இன்று காலை தொழிலாளர்கள் எண்ணை கப்பல் ஒன்றின் டேங்கரை கியாஸ் வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி எடுக்கும் பணியில்  ஈடுபட்டிருந்தனர் . அப்பொழுது கப்பலின் ஒருபகுதி திடீரென்று வெடித்து சிதறியது. இதைதொடர்ந்து, அடுத்தடுத்தும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பத்து தொழிலாளர்கள் பலியானதாகவும், ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்த அனைவரும் கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை உயரக் கூடும்.

இவ்விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார் . மேலும் காயமடைந்து கராச்சி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு  மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.