உலகம்

பயத்தை புறக்கணியுங்கள்; நம்பிக்கையை தேர்ந்தெடுங்கள்: ஒபாமா சூசகம்

மக்களின் அடிப்படை உணர்வுகளை டொனால்ட் டிரம்ப் புறக்கணித்துவிட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.


வாஷிங்டன்: மக்களின் அடிப்படை உணர்வுகளை டொனால்ட் டிரம்ப் புறக்கணித்துவிட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "பயத்தை புறக்கணித்து விடுங்கள், நம்பிக்கையை தேர்வு செய்யுங்கள்" என்று சூசகமாகக் கூறினார்.

அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றும், குற்றவாளி என்றும் டிரம்பை மறைமுகமாக தாக்கிப் பேசிய ஒபாமா, நாம் ஒற்றுமையாக பலமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்றவர்களை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யக் கூடாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT