உலகம்

இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

லாவோஸின் தகலைநகர் வியன்டைனில் 14-ஆவது இந்திய ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 11-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில்  கலந்து கொள்வதற்காக இந்தியப்  பிரதமர் மோடி லாவோஸ் சென்றுள்ளார்.

இன்று காலை  அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.  இவர்களிருவரின் சந்திப்பு பற்றி மத்திய வெளியுறவுத்துறை  செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தன்னுடைய டிவிட்டரில், 'இரண்டு ஜனநாயக நாடுகள் மற்றும் ஒரு முக்கியமான கூட்டுறவு; மோடி,ஒபாமா சந்திப்பு' என்று செய்தி வெளியிட்டுள்ளார்.   

இவர்கள் இருவரும் கடைசியாக பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பொழுது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஏசியான் உச்சி மாநாடு மற்றும்  கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT