அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி மரணம்: ஆற்றில் சடலமாக மீட்பு
நியூ யார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்த, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி ஷெய்லா அப்துஸ்-சலாம் ஹூட்சன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
நியூ யார்க்: நியூ யார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்த, அமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி ஷெய்லா அப்துஸ்-சலாம் ஹூட்சன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
நியூ யார்க் காவல்துறையின் துறைமுகப் பிரிவு காவல்துறையினர், மான்ஹட்டன் அருகே, ஹூட்சன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஷெய்லாவின் உடலை கண்டெடுத்தனர்.
65 வயதான ஷெய்லா, ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உடலை, கணவர் அடையாளம் காட்டினார்.
Advertisement
ஹர்லேம் பகுதியில் வசித்து வந்த ஷெய்லா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் சிக்கினாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை. அவரது உடலில் எந்த காயமும் இல்லை. மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகே முடிவு செய்ய முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு முதல் ஷெய்லா நீதிபதியாக பணியாற்றி வந்தார்.