உலகம்

பாரீஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸார் ஒருவர் பலி

DIN

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் சேம்பஸ் எலிஸஸ் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் ஒருவர் உயிரிழந்துள்ளார், 2 போலீஸார் காயமடைந்துள்ளனர். போலீஸார் திருப்பி சுட்டதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காயமடைந்த போலீஸார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரான்சிஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) முதல்கட்ட அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்ந 2 மாதங்களில் பயங்கரவாதிகள் 3 முறை பிரான்ஸில் தாக்குதல் நடத்தியுள்ளனர்

விசாரணையில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதி அபு யூசப் ஹல் பெல்ஜிக்கி என்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT