லண்டன்: உலக அளவில் பிரபலமான ஆங்கில தொலைக்காட்சித் தொடரான 'கேம் ஆம் த்ரோன்ஸ்' அடுத்த பாகத்தினை ஹேக்கர்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹெச்.பி.ஓ என்னும் பிரபல ஆங்கில சேனலில் வெளிவரும் 'கேம் ஆம் த்ரோன்ஸ்' உலக அளவில் பிரபலமான தொலைக்காட்சித் தொடராகும். உலகம் முழுவதும் இந்த தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்த வாரம் தற்பொழுதைய சீசனின் நான்காவது பகுதி அடுத்த வாரம் வெளியாக இருந்தது இந்த நிலையில் இந்த பாகத்தின் திரைக்கதை உள்ளிட்ட மேலும் சில நாடகங்களின் பகுதிகள் ஹெச்.பி.ஓ நிறுவன சர்வர் கணினிகளில் இருந்து திருடப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தொகுப்புகள் சுமார் 1.5 டெரா பைட் அளவு கொண்டதாகும்.
இவ்வாறு திருடப்பட்ட பகுதிகளை ஹேக்கர்கள் தற்பொழுது திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அத்துடன் மேலும் சில பகுதிகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தனது நிறுவன சர்வர்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதை ஹெச்.பி.ஓ நிறுவனமும் ஒத்துக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.