உலகம்

பார்சிலோனா தாக்குதல் நிகழ்த்தியவருக்கான தேடுதல் வேட்டை தீவிரம்

DIN

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து பொதுமக்கள் மீது மோதி பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்திய நபருக்கான தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அந்த பயங்கரவாத சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 120 பேருக்கும் மேல் காயமடைந்தனர்.
அந்த தாக்குதலை நிகழ்த்திய நபர் 22 வயதான யூனிஸ் அபு யாகூப் என்று போலீஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவுடன் வாகனத்திலிருந்து வெளியேறித் தப்பிய யாகூப் தலைமறைவாக உள்ளார். அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அவருக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதி யூனிஸ் அபு யாகூப் ஸ்பெயினைவிட்டு வெளியேறி பிரான்ஸýக்குள் நுழைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, அவரைப் பிடிக்க பிரான்ஸ் போலீஸாரும் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஸ்பெயின் முழுவதும் அதிகபட்ச எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கேடலோனியா சுயாட்சி மாகாணப் பகுதியில் நகர வீதிகள், எல்லைப் புறச் சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனமும் தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
இதனிடையே பார்சிலோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அந்த நகரின் புகழ் பெற்ற ஸக்ராடா ஃபாமிலியா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஸ்பெயின் அரசர் பிலிப், அவரது மனைவி லெடீஸியா, போர்ச்சுகல் அதிபர் மார்செல்லோ ரிபெலோ டிசூஸா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பார்சிலோனா தாக்குதலைத் தொடர்ந்து கேம்ப்ரில்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்த 5 பயங்கரவாதிகள் நடத்திய முயற்சி முறியடிக்கப்பட்டது. அவர்கள் ஐவரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பார்சிலோனா, கேம்ப்ரில்ஸ் பயங்கரவாதிகள் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் என்று அந்த இயக்கம் வெளியிட்ட இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT