உலகம்

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளி!

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படு கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி அன்று ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தாலிபான் இயக்கத்தினைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் பாகிஸ்தான் அதிபரான முஷாரப் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முன்னாள் டி.ஐ.ஜி உட்பட இரண்டு காவல்துறை அதிகாரிங்களுக்கு 17 ஆண்டு கடுங்காவல் தணடனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அதிபர் முஷாரப் தற்பொழுது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்

முஷாரப்பின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரினை விடுதலை செய்தும் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT