உலகம்

1,300 முறை அத்துமீறித் தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

DIN

நிகழாண்டில் மட்டும் தங்களது எல்லைக்குள் இந்தியா 1,300 முறை அத்தமீறித் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் விளைவாக 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும், 175 பேர் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. அந்த விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. நிகழாண்டில் மட்டும் 1,300 முறை அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 52 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். மேலும், 175 பேர் பலத்த காயமடைந்தனர். இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களது நாட்டில் பயங்கரவாதிகளுக்கோ, தீவிரவாதிகளுக்கோ புகலிடம் அளிக்கவில்லை.
பாகிஸ்தான் - சீனா இடையேயான பொருளாதார வழித்தடத் திட்டத்தில் மூன்றாவது நாடும் பங்கெடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதுகுறித்து பாகிஸ்தானும், சீனாவும் ஆலோசித்தே முடிவெடுக்கும் என்றார் அவர்.
இந்தியத் துணைத் தூதருக்குக் கண்டனம்: இதனிடையே, அத்துமீறல் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT