உலகம்

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 42 பேர் பலி!

DIN

டமாஸ்கஸ்: சிரியாவில் வடக்குப் பகுதி கிராமம் ஒன்றில் இன்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 42 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிய நகரமான அல்-பாப்பின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் சூசியன். அங்கு பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்றின் மீது இன்று வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதி வெடித்து சிதறியது. இதில் 42 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். .

இந்த பாதுகாப்பு சோதனைச் சாவடியானது ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு  எதிராக 'சுதந்தர சிரிய ராணுவம்' என்ற பெயரில் போராடி வரும் படைக்குழுவினரால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகும்.

காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்  கூடுமென்று சிரியாவிலிருந்து செயல்படும் மனித உரிமைஅமைப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT