உலகம்

அகதிகளின் பேஸ்புக் பக்கங்களை கண்காணிக்கும் அதிகாரிகள்: டிரம்ப் உத்தரவின் விளைவு! 

IANS

நியூயார்க்: அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை  நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் பேஸ்புக் பக்கங்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சோதனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

அமெரிக்க அதிபராக கடந்த 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பொதுமக்கள் வருகை தருவதற்கு விசா வழங்கப்பபடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார். தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், இந்த திடீர் உத்தரவு கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில், டிரம்ப்பின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது.    

டிரம்ப் தடையின் கீழ் வரும் நாடுகளை சேர்ந்த ஆனால் அதேநேரம் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு 'கிரீன் கார்ட்' பெற்றுள்ளவர்கள் கூட , தற்போது வெவேறு அமெரிக்க விமான நிலையங்களில்  எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகளால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'தி இண்டிபெண்டண்ட்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை  நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் பேஸ்புக் பக்கங்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சோதனை செய்கின்றனர் என்றும், அவர்களதுஅரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் சோதனை செய்யப்படுகின்றன என்றும், அதன் பிறகே அவர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படுகிறது என்றும்   அந்த செய்தியில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT