உலகம்

ரூ.2 கோடி முதல் 20 கோடி அபராதம்: தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா

DIN


கொழும்பு: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட இருமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தாலும், எல்லைத் தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தாலும், தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் வகையில், இலங்கையின் கடற்தொழில் சட்டத் திருத்த மசோதாவை, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட திருத்த மசோதா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றும், நாங்கள் கடலில் கால் வைக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக்கிவிடும் என்றும், உடனடியாக இந்தியா அரசு தலையிட்டு, இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற விடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT