முகப்பு
உலகம்

70 வருடங்களில் இதுவே சிறந்த வரிப் புரட்சி: ஜிஎஸ்டி குறித்து ஜி20-ல் மோடி பெருமிதம்

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இதுவே சிறந்த வரிப் புரட்சி என உலக ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Updated On : 7 ஜூலை, 2017 at 3:58 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:52 PM

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி20 12-வது மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இது கடந்த 70 வருடங்களில் இந்தியாவின் வரி முறையில் ஏற்பட்டுள்ள தலைசிறந்த புரட்சியாகும்.

இந்தியாவின் பொருளாதார நிலை 7 சதவீத ஜிடிபி-யுடன் சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார முறைக்கு சவால் விடும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.