உலகம்

பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தேர்வு!

DIN


பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அளித்தது.

நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் முதல்வரும், நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார். 

இவர், 2018-ம் ஆண்டு தேர்தல் வரும்வரை பாகிஸ்தான் பிரதமராக செயல்படுவார் எனவும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT