உலகம்

உச்ச நீதிமன்ற உத்தரவு: பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நவாஸ் ஷெரீஃப்

DIN

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், நவாஸ் ஷெரீஃப் மீது கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து,நவாஸ் ஷெரீஃப்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT