உலகம்

இது புதுசு: துபாய் காவல்துறையில் முதல் ரோபோடிக் காவலர் 

தொழில்நுட்பப் புரட்சியின் துவக்கமாக துபாய் காவல்துறையில் முதல் முறையாக ரோபோடிக் காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ENS


துபாய்: தொழில்நுட்பப் புரட்சியின் துவக்கமாக துபாய் காவல்துறையில் முதல் முறையாக ரோபோடிக் காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

துபாய் காவல்துறையில் கடந்த புதன்கிழமை ரோபோடிக் காவலர் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 2030க்குள் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் கால் பங்கு ரோபோடிக் காவலர்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான கட்டடம் என்று புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் வாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரோபோடிக் காவலரைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

காவல்துறையின் தொப்பையை அணிந்து கொண்டு சக்கரத்தின் மூலம் நகரும் ரோபோடிக்கின் நெஞ்சுப் பகுதியில் 'டச் ஸ்க்ரீன்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் குற்றங்கள் நடந்தாலும் பதிவு செய்யலாம், தகவல் தேவைப்பட்டால் விசாரித்துக் கொள்ளவும் முடியும்.

2030க்குள் தற்போதிருக்கும் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதம் அளவுக்கு ரோபோடிக்குகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பிடிகேடியர் கலெத் அல் ரசூகி கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்கள் போன்ற பகுதிகளில் அதிகம் பணியமர்த்தப்பட உள்ளன. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலமாக, காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்!

ரிஷப ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தில்லியில்... 2024-ல் மூச்சு பிரச்னையால் 9,000 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு: தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தல்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

SCROLL FOR NEXT