உலகம்

தெற்கு பிலிப்பைன்ஸில் பயங்கரவாதிகளின் பிடியில் பள்ளி மாணவர்கள் சிறைப்பிடிப்பு

DIN

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த ஏராளமான மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பிலிப்பைன்சின் மிண்டனோ தீவில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ராணுவ படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிக்கவயான் நகரில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் ஆயுதம் ஏந்திய 300 பயங்கரவாதிகள் இன்று அதிகாலை நுழைந்துள்ளனர். பள்ளிக்குள் பதுங்கி இருந்து அவர்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் பள்ளிக்குள் இருப்பதாலும், அவர்கள் பிடியில் மாணவர்கள் பலர் இருப்பதாலும் பதில் தாக்குதல் நடத்த முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள மாணவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிர முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவினர் என பிலிப்பைன்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT