உலகம்

பிரேசில்: வாகனங்கள் மோதிக் கொண்டதில் 21 பேர் பலி

DIN

பிரேசிலில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில் கருங்கற்களை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மீது வேகமாக மோதியது. வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதில், பேருந்தில் சென்ற பயணிகள் 13 பேரும் அடங்குவர்.
மேலும், 13 பேர் காயமடைந்து அருகில் உள்ள குவாரபாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இந்த மாதத்தில் நிகழும் மூன்றாவது பெரிய சாலை விபத்து என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பின் 2013-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தில் பிரேசிலில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளினால் 47,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT