உலகம்

கனடா: உச்ச நீதிமன்றத்தில் முதல் சீக்கிய பெண் நீதிபதி

DIN

கனடா உச்ச நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்விந்தர் கெüர் ஷெர்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை ஆர்வலரான அவர், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த முதல் சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஷெர்கில் அண்டு கம்பெனி' என்ற பெயரில் சட்ட சேவைகளை அளித்து வந்த ஷெர்கில், கனடா நாடு முழுவதும் மனித உரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நீதிபதிகள் தேர்வு முறையின் அடிப்படையில் பல்விந்தர் கெüரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அந்த நாட்டு நீதித் துறை அமைச்சர் ஜூடி வில்சன்-ரேபோல்டு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அவரது நியமனத்தை உலக சீக்கியர்கள் அமைப்பு (டபிள்யூஎஸ்ஓ) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பல்விந்தர் கெüர் ஷெர்கில் நியமிக்கப்பட்டுள்ளது, அந்த நாட்டு மக்களுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT