உலகம்

இது எனக்கும் கடவுளுக்குமான விவகாரம்: மசூதியில் திருடியவனின் கலக்கல் கடிதம்! 

ENS

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் பணம் மற்றும் பொருட்களைத் திருடிய பிறகு, திருடன் ஒருவன் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதம் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் பகுதியில் கானேவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜாமியா மஸ்ஜித் சாதிக்குல் மதினா மசூதி. இது அந்த பதியில் மிகவும் புகழ் பெற்ற வழிபட்டுத் தலமாகும். இந்த மசூதியில் நேற்று இரவு, பக்தர்கள் வழங்கிய காணிக்கைத் தொகை அடங்கிய இரண்டு பெட்டிகளும், மின்வெட்டு நேரத்தில் பயன்படுதுவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு பேட்டரிகளும் திருடு போயிருந்தன.

மசூதியின் தலைமை பிரார்த்தனையாளர் கரி சயீத் அளித்த தகவலின்படி திருடு போன பணம் மற்றும் பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.50,000 ஆகும். திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்ட  பொழுதான் திருடன் அங்கு விட்டுச் சென்ற கடிதம் ஒன்று அவர்கள் பார்வைக்கு கிடைத்தது.

அந்த சுவாரஸ்யமான கடிதத்ததில் திருடன் குறிப்பிட்டுள்ளதாவது:

இது எனக்கும் கடவுகளுக்குமான விவகாரம். யாரும் இதில் தலையிட வேண்டாம். யாரும் என்னை கண்டுபிடிக்கவும் முயற்சிக்க வேண்டாம். நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவன்.  உதவி கேட்டு சில நாட்ளுக்கு முன்பு இந்த மசூதிக்கு வந்தேன்.ஆனால் இங்குள்ள தலைமை பிரார்த்தனையாளர், எனக்கு உதவி செய்ய மறுத்ததுடன், வெளியே துரத்தி விட்டு விட்டார்.

எனவே எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் மசூதியிலிருந்து திருட வேண்டிய நிலைக்கு உள்ளானேன். நன் யாருடைய வீட்டிலிருந்தும் திருடவில்லை. அல்லாவின் இல்லத்திலிருந்து சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே இது எனக்கும் கடவுகளுக்குமான விவகாரம். யாரும் இதில்  உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைக் கண்டு இரக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் திருடனை  மன்னித்து விடுமாறு சயீதிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சிலர் திருடு போன பேட்டரிகளுக்கு பதிலாக புதிய பேட்டரிகளை தாங்கள் வாங்கி அளித்து விடுவதாகக் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT