உலகம்

திரைப்பட விழாவில் நடிகருக்கு பதிலாக விருதைப் பெற்ற 'டூப்'! 

IANS

பெர்லின்: திரைப்பட விழா ஒன்றில் புகழ்பெற்ற நடிகர் ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய ஒருவர் விருது பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜெர்மனியில் நடைபெறும் கோல்டன் கேமரா என்னும் திரைப்பட விழா மிகவும்ப புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் "லா லா லேண்ட்" என்னும் திரைப்படம் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.இந்த விழாவில்தான் அந்த திரைப்படத்தின் கதாநாயகனும்,புகழ்பெற்ற  நடிகருமான ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய ஒருவர் விருது பெற்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து இந்த நிகழ்வுக்கு தொகுப்பாளராக பணிபுரிந்த ஸ்டீவன் கேட்டின் வெரைட்டி.காம் என்னும் இணையதளத்திற்கு அளித்த பேட்டி விபரம் வருமாறு:

சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட அந்தப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட யாரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியயாத நிலை. எனவே நகைச்சுவைக்காக இப்படி ஒரு செயலை செய்யலாம் என்று திட்டமிட்டோம். இதற்காக ரியான் கோஸ்லிங்குக்குப் பதிலாக அவரைப் போலவே தோற்றமுடைய  லுட்விக் லென்னரை  அணுகினோம். இவர் இத்தாலிய நகரமான முனிச்சில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். 

நிகழ்வில் சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டவுடன், 'படத்தின் இயக்குனர் கலந்து கொள்ள முடியாத  நிலையில் இவர் கலந்துகொண்டு விருதுபெறுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர்தான் இந்த படத்தின் கதாநாயகன் ரியான் கோஸ்லிங்க' என்று அறிவித்தேன்.

உடனே மேடையில் தோன்றிய லுட்விக் நன்றி கூறி விருதினை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அரங்கத்தில் நிக்கோல் கிட்மேன், காலின் பெர்ரெல் மற்றும் ஜேன் போன்டா உள்ளிட்ட பிரபல நடிக நடிகையரும் இருந்தனர். அவர்கள்  இதனை வியாபாபுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் விருது நிகழ்வு முடிந்தவுடன் நடந்த விஷயத்தைக் கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்.

இவ்வாறு ஸ்டீவன் கேட்டின் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT