உலகம்

நேபாளத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி! 

நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் நேற்று இரவு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியானார்கள்.

IANS

காத்மாண்டு: நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் நேற்று இரவு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியானார்கள்.

நேபாளத்தின் வடக்கு மாவட்டமான ஜாஜார்க்கட்டில் உள்ள கலாங்கா என்ற கிராமத்தில் இருந்து காரா என்ற கிராமத்தை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சிஞ்சு -ஜஜார்காட் நெடுஞ்சாலை அருகே அந்த  பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். படுகாயமடைந்த மூன்று பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.

இந்த தகவல்களை ஜாஜார்க்கட் மாவட்ட தலைமை அலுவலர் கிருஷ்ண சந்திர பொதுல் தெரிவித்தாக காத்மாண்ட் போஸ்ட் என்னும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT