உலகம்

பாகிஸ்தானில் நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே இதயத்தோடு பிறந்த குழந்தை

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையில், பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே அதன் இதயம் அமைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

IANS


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையில், பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே அதன் இதயம் அமைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக அங்கிருந்து லாகூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் குழு கூறியிருப்பதாவது, தற்போது குழந்தை நலமாக இருப்பதுடன், அதன் இதயமும் சரியாக இயங்கி வருகிறது. அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தை சரியான இடத்தில் பொருத்த வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால், இந்த குழந்தை நிச்சயம் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.

நெஞ்சுக் கூட்டில் இல்லாமல், பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வேறு இடத்தில் இதயம் இருப்பதை எக்டோபியா கார்டிஸ் என்று அழைப்பர். இது மிகவும் அரிதான பிரச்னை. 50 லட்சம் முதல் 70 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்குத்தான் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT