உலகம்

இந்தோனேசியாவில் வாலிபரை அப்படியே விழுங்கிய 23 அடி நீள மலைப்பாம்பு! (வீடியோ இணைப்பு) 

DIN

சுலவெசி (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் பனை எண்ணெய் தோட்டத்தில் வேலைக்கு சென்ற வாலிபர் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் பிணமாக மீட்கப்பட்ட  அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ளது சலுபிரோ எனும் கிராமம். இங்குள்ள அக்பர் (25) என்னும் வாலிபர் கடந்த ஞாயிறு அன்று தனது வீட்டில் இருந்து பனை எண்ணெய் அறுவடை செய்யும் பணிக்கு சென்றுள்ளார். ஆனால் மறுநாள் வரை அவர் வீட்டுக்கு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் அவரை திங்கள் இரவு முதல் தேடத்  துவங்கியுள்ளனர்.

மறுநாள் புதனன்று அவரது பண்ணைக்கு அருகில் நகர முடியாமல் 23 அடி நீளமுள்ள வலை வடிவ மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டனர். அதற்கு அருகிலேயே பனை எண்ணெய் எடுக்க உதவும் பழம்,பறிக்க உதவும் கத்தி மற்றும் காலணியும் கிடந்தது.

இதனால் அக்பரை அந்த மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என்று கருதிய கிராமத்தினர் அந்த மலைப்பாம்பை விரட்டி, தாக்கி கொன்றனர்.பின்னர் அவர்கள் சேர்ந்து அதன் வயிற்றை கிழித்து பார்த்த பொழுது, உள்ளே அக்பரின் உடலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பின்னர் அவர்கள்  அக்பரின் உடலை வெளியே எடுத்தனர்.அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT