உலகம்

7,500 போலி அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

DIN

புகலிடம் தேட முறையான காரணம் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள சுமார் 7,500 போலி அகதிகளை வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐந்தாண்டு காலத்தில் வந்த சுமார் 50,000 பேரில், 20,000 பேருக்கு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசு புகலிடம் அளிக்க முடிவு செய்தது. மேலும் 30,000 பேரின் நிலை குறித்து ஐயம் எழுப்பியிருந்தது.
இந்நிலையில், அவர்களில் சுமார் 7,500 பேர் முறையான காரணம் இல்லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப தற்போதைய முற்போக்கு கட்சி அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT