உலகம்

வட கொரியா விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு சீனா வலியுறுத்தல்

DIN

வட கொரியா விவகாரத்தில் அவசர முடிவுகள் எடுக்காமல், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திப் பதற்ற நிலையைத் தணிக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இது தொடர்பாகத் தெரிவித்ததாவது: வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தடைகள் தெளிவாக இருக்கின்றன. வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை சீனாவும் எதிர்க்கிறது.
கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் சிக்கலானதாகும். பல்வேறு தரப்பினரும் ஒருவரையொருவர் தூண்டிவிடும் விதத்தில் கருத்து தெரிவிக்காமல், ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடத்தி பதற்றத்தை தணிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT