உலகம்

இந்தியச் சிறுமி மரணம்: கைதான கேரள தம்பதிக்குப் பிறந்த குழந்தை உறவினர்களிடம் ஒப்படைப்பு

DIN


லண்டன்: இந்தியச் சிறுமி ஷெரின் மேத்யூஸ் மரணம் அடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த 4 வயது  மகள் அவளது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த வெஸ்லே மேத்யூஸ் - சினி மேத்யூஸ் தம்பதிக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். லண்டனில் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள் பிகாரைச் சேர்ந்த சிறுமியை (ஷெரின் 3) தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், அக்டோபர் 7ம் தேதி ஷெரின் மேத்யூஸ் காணாமல் போனதாக, அவளது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த தம்பதியின் 4 வயது மகள் அவர்களிடம் இருந்து பிரித்து தனியாக பாதுகாக்கப்பட்டு வந்தார்.

குழந்தை ஷெரின் உடல் அவர்களது வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவளை அடித்துத் துன்புறுத்தியக் குற்றச்சாட்டுக்காக, தந்தை வெஸ்லே மேத்யூஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஹுஸ்டனில் இருக்கும் அவர்களது உறவினர்களிடம் அந்த சிறுமி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு முன்பு, அவள் ஒப்படைக்கப்பட வேண்டிய குடும்பத்தாரையும் காவல்துறையினர் நன்கு விசாரித்துள்ளனர்.

3 வயதான ஷெரினை பாதுகாப்பற்ற முறையில் தனியாக விட்டக் குற்றத்துக்காக, அவரது வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டதற்கு மறுநாளே, அவர்களது மகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக தனது மகளை காப்பகத்தில் இருந்து மீட்டு தன்னுடன் வைத்துக் கொள்ள சினி மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT