உலகம்

அமெரிக்க டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

DIN

டெக்சாஸ்:  அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீஸார் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

துப்பாக்கி சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு பணியில் அதிரடி படை போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது.  சமீபத்தில் லாஸ் வேகாசில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT