உலகம்

மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 241 அகதிச் சிறுவர்கள் மீட்பு

DIN

அகதிகளாக வந்து மத்தியதரைக் கடல் பகுதியில் சிக்கித் தவித்த 241 சிறுவர்கள் உள்பட 606 பேர் படகு மூலம் மீட்கப்பட்டு இத்தாலி கொண்டு செல்லப்பட்டனர். 
இதுகுறித்து, தன்னார்வ அமைப்பான எஸ்ஓஎஸ் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு போர் காரணமாக, லிபியா, எரித்ரேயா, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா, சோமாலியா, யேமன் உள்ளிட்ட 15 நாடுகளிலிருந்து ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக ஆபத்தான வழிமுறையில் கடல் பயணம் மேற்கொள்கின்றனர். 
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை அதிகளை ஏற்றி வந்த படகுகள் விபத்துக்குள்ளானதில் 606 பேர் கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் எங்களுக்கு சொந்தமானஅக்குவாரிஸ் மீட்புப் படகு மூலம், அவர்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், 241 சிறுவர்களும் அடங்குவர் என்று அந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT