உலகம்

சூடானில் உள்ள இந்திய அமைதி காப்புப் படைக்கு ஐ.நா. பதக்கம்

DIN

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் 50 பேருக்கு அவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதில் ஆற்றிய சேவை ஆகியவற்றுக்காக ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் அமைதிப் பணியாற்றி வரும் ஐ.நா. படையின் ஒரு பகுதியாக இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்நாட்டின் ஜோங்க்ளி மாகாணத்தில் உள்ள போர் பகுதியில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 50 பேருக்கு அவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதில் ஆற்றும் சேவை ஆகியவற்றுக்காக ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது. 
அவர்களுக்கு ஐ.நா. அமைதி காப்புப் படையின் தளபதியான ஃபிராங்க் முஷ்யோ கமான்சி இப்பதக்கங்களை 
வழங்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT