உலகம்

கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான தகவல் இல்லை

DIN

இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-இல் கைப்பற்றியபோது கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்தார்.
இராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மொசூல், மேற்கு பிராந்தியத்தில் உள்ள சில பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்போது, 39 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்தினர்.
கடந்த 9 மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு மொசூல் நகரை இராக் ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் ஹைதர் அல்-அபாடி தெரிவித்தார்.
கடத்தப்பட்ட இந்தியர்களின் உறவினர்களிடம் அவர்கள் மொசூல் அருகே பாதுஷ் பகுதியில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த ஜூலை மாதம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட இந்தியர்கள் கட்டட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT