உலகம்

பலாத்காரத்தை அரசியலாக்க வேண்டாம்: லண்டனில் இருந்து பிரதமர் மோடி

DIN

லண்டன்: கதுவா விவகாரத்தில் மோடி மௌனமாக இருக்கிறார் என்ற குரல் லண்டன் வரை எதிரொலித்தது போலும், பலாத்கார சம்பவங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

லண்டனில், நேற்று 'பாரதத்தின் குரல், எல்லோருடனும்' என்னும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பாலியல் பலாத்காரம் என்பது எப்போது நடந்தாலும் அது பலாத்காரம்தான். நம் மகள்களுக்கு எதிராக நடக்கும் இந்த கொடுமைகளை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? ஆனால், எந்த ஆட்சியில் அதிகமான பலாத்காரம் என்று ஒப்பிட்டுப் பார்க்கவா முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நம் பெண் பிள்ளைகள் தாமதமாக வீட்டுக்கு வரும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், மகன்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறோமா? பெண்களை மதிக்க வேண்டும் என்று ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் தாக்குதல் குறித்துப் பேசிய மோடி, எப்போதும் நாம் அமைதியையே விரும்புகிறோம். ஆனால், பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையை நடத்தி, இந்தியர்களைக் கொல்வோரை ஒருகாலும் சகித்துக் கொள்ள மாட்டோம். அதனால்தான், அவர்களுக்கு புரியும் வகையில் பதிலடி கொடுத்தோம் என்று மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT