உலகம்

உங்கள் ஜிமெயிலிருந்து உங்களுக்கே அனுப்பப்படும் 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு! 

IANS

சான் பிரான்சிஸ்கோ: பயனாளர்களின் ஜிமெயில் கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் கூகுளின் ஜிமெயில் சேவை முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு 'ஸ்பாம்' எனப்படும் வணிக நோக்கில் பரவலாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் பற்றித் தெரிந்திருக்கும். கூகுளின் ஜிமெயில் சேவையில் இத்தகைய 'ஸ்பாம்' மின்னஞ்சல்களைத் தவிர்ப்பதற்காக, அவற்றின் சர்வர் கணிப்பொறிகளில் ‘ஸ்பாம் பில்டர்கள்’ எனப்படும் முறை பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறி பயனாளர்களின் ஜிமெயில் கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக 'மஷாபில்' தொழில்நுட்ப இணைய தளத்தில் வெளியாகியிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சில குறிப்பிட்ட ஜிமெயில் பயனாளர்கள் அவர்களது கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' விளம்பர மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் ஸ்பாம் பில்டர்களில் இருந்து தப்பும் பொருட்டு, அனுப்பும் முகவரிகளை  'டெலஸ்' எனப்படும், கனடா நாட்டுத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து அனுப்பபடுவது போல போலியாக வைத்துக் கொள்கின்றன. அத்துடன் மின்னஞ்சலின் தலைப்பு 'ஆண்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் வழிகள் மற்றும் மருந்துகள்' என்பதாக அமைந்து இருக்கின்றன.

இவ்வாறு அந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இவ்வாறு ஒரு சிறிய அளவிலான ஜிமெயில் பயனாளர்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும்,அதை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  அதேசமயம் இதன் காரணமாக பயனாளர்களின் கணக்கில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுகளும் கிடையாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT