உலகம்

மூன்றரை லட்சம் பங்குகள்.. ரூ.2524 கோடி லாபம் அள்ளிய 'கூகுள் தமிழன்' சுந்தர் பிச்சை! 

கூகுள் நிறுவனத்தில் பதவி உயர்வின் போது வழங்கப்பட்ட மூன்றரை லட்சம் பங்குகளின் மதிப்பு உயர்வால், நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சைக்கு ரூ.2524 கோடி லாபம் கிடைத்துள்ளது.

DIN

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் பதவி உயர்வின் போது வழங்கப்பட்ட மூன்றரை லட்சம் பங்குகளின் மதிப்பு உயர்வால், நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான தமிழர் சுந்தர் பிச்சைக்கு ரூ.2524 கோடி லாபம் கிடைத்துள்ளது.

கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் தமிழரான சுந்தர் பிச்சை.அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்றார் . அப்பொழுது கூகுளின் தலைமை நிறுவனமான 'ஆல்பெபெட்'  சுமார் மூன்றரை லட்சம் பங்குகளை சுந்தர் பிச்சைக்கு பரிசாக வழங்கியது.

இந்த பங்குகளனைத்தும் உடனடியாக வெளியில் விற்கவியலா வகையில் அமைந்த பங்குகளாக அமைந்தன. அப்படி அவருக்கு வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு தற்போது 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவற்றின் காரணமாக பங்குகளின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2524 கோடியாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT